தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பேட்டிங்கில் முதன்முறை திணறும் இந்திய அணி!

ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி முதன்முறையாக பேட்டிங்கில் திணறுகிறது. மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் வெறும் 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்தியா.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால், இந்தியா நினைத்ததுபோல் தொடக்கம் இருக்கவில்லை. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சு வேறுமாதிரியாக இருந்தது.

மயங்க் அகர்வால் 10 ரன்களுக்கும், சட்டேஷ்வர் புஜாரா ரன் எதுவும் எடுக்காமலும், விராத் கோலி 12 ரன்களுக்கும் பெவிலியின் திரும்ப வேண்டியிருந்தது. இதற்கு காரணம் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள்.

அகர்பாலையும் புஜாராவையும் ரபாடா காலிசெய்ய, கோலியை சோலி முடித்தவர் ஆன்ட்ரிச் நார்ட்ஜே.
கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி பேட்டிங்கில் பிரமாதமாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், தற்போது டாஸ் வென்று பேட்டிங் தேர்வசெய்தபோதும் இந்திய அணியால் நினைத்ததுபோன்று பேட்டிங்கில் எதுவும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது ரகானேவும் ரோகித்தும் களத்தில் உள்ளனர். முதல் மூன்று முக்கிய பேட்ஸ்மென்களும் ஆட்டமிழந்துவிட்ட நிலையில், அடுத்தடுத்த வீரர்களாவது நிலைத்துநின்று ஆடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-