பெங்களூரு: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறும் மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் எடுப்பதால் பட்டையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து, 10 ஓவர்களில் வெறும் 76 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

தொடக்கவீரர் ஷிகர் தவான் 25 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 36 ரன்களுக்கு அவுட்டாக, ரோகித் ஷர்மா இந்த முறையும் தன்னை நிரூபிக்க தவறினார். அவர் வெறும் 9 ரன்களுக்கு பெவிலியன் வந்துவிட்டார்.

சரி, சென்றமுறை கடைசிவரை நாட்அவுட்டாக இருந்த விராத்கோலி இந்தமுறை ஏதாவது செய்வார் என்று பார்த்தால் அவரின் பங்களிப்பு வெறும் 9 ரன்கள்.

இந்தவகையில், இந்தியாவின் மூன்று முக்கிய முன்கள பேட்ஸ்மென்களும் காலியாகிவிட, தற்போது ரன் சேர்க்கும் பொறுப்பு நடுக்கள வீரர்களிடம் வந்துள்ளது.

ரிஷப் பன்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஆடி வருகிறார்கள். ரிஷப் பன்ட் இந்தமுறை அடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சில் மிரட்டி வருகிறது.