திணறும் இந்தியா – 155 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் காலி!

கான்பெரா: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய அணி, 33 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 155 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது இந்திய அணி. அதனையடுத்து, துவக்க வீரர் ஷிகர் தவான் 27 பந்துகளில் 16 ரன்களையும், ஷப்னம் கில் 39 பந்துகளில் 33 ரன்களையும் எடுத்தனர்.

பின்னர், பெரிய இன்னிங்ஸ் ஆடுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட விராத் கோலியும், ஷ்ரோயாஸும் ஏமாற்றினர். விராத் கோலி 78 பந்துகளில் 63 ரன்களையும், ஷ்ரேயாஸ் 21 பந்துகளில் 19 ரன்களையும் அடித்து அவுட்டாகினர்.

பின்னர், ராகுலாவது காப்பாற்றுவர் என்று எதிர்பார்த்திருக்க, அவர் 11 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே அடித்து நடையைக் கட்டினார்.

தற்போது, பாண்ட்யாவும், ஜடேஜாவும் ஆடி வருகின்றனர். அவர்களும், அதிகப் பந்துகளில் குறைந்த ரன்களையே அடித்துள்ளனர். மொத்தத்தில், அனைத்து பேட்ஸ்மென்களுமே ஒருவகையில் டெஸ்ட் போட்டியை ஆடி வருகின்றனர்.