டில்லி

ந்தியாவின் சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.

இந்தியாவின் அதி நவீன சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை நிலம், கடல் வழியாக சோதனை செய்யப்பட்டு வெற்றி அடைந்துள்ளது.   தற்போது இந்த ஏவுகணையை விண்ணில் செலுத்தி சோதனை நடத்தியதில் அதிலும் வெற்றி அடைந்துள்ளது.

இது குறித்து மத்திய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், “உலகின் மிக வேகமாக செல்லக்கூடிய ஏவுகணைகளில் சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணையும் ஒன்றாகும்.  இந்த ஏவுகணை சுகோய் 30 எம் கே ஐ போர் விமானம் மூலமாக சோதனை செய்யப்பட்டடது.  சுமார் 2.5 டன் எடையுள்ள இந்த ஏவுகணை 3200 கிமீ இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது.   வானில் இருந்து சுகோய் விமானம் மூலம் ஏவப்பட்ட இந்த ஏவுகணை வங்காள விரிகுடாவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியுள்ளது.   இதனால் நமது விமானப் படைக்கு புதியதோர் நம்பிக்கையும் ஊக்கமும் கிடத்துள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை வெற்றிக்கு மத்திய ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்