பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி

சந்திப்பூர்:

டிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட அதிவேக பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒலியைவிட அதி வேகமாக சென்று தாக்கக் கூடிய பிரமோஸ் ரக ஏவுகணைகளை இந்தியா ரஷ்யாவின் உதவியுடன் தயாரித்து சோதித்து வருகிறது.

இந்த ஏவுகணைகள் நீர்மூழ்கிக் கப்பல், போர் விமானம், தரைவழி போன் எந்த இடத்தில் இருந்தும் எதிரிகளின் இலக்கை குறிவைத்து ஏவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதுபோன்ற சூப்பர் சோனிக்கு ஏவுகனை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில், இன்றும் ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து மீண்டும் சோதனை நடத்தபபட்டது.

இன்று காலை 08.42  மணிக்கு  ஏவு வாகனம் ஒன்றில் இருந்து பிரமோஸ் ஏவுகணை செலுத்தி  சோதனை நடத்தப்பட்டது. இநத ஏவுகணை குறிப்பிட்ட இலங்கை தாக்கியதாகவும், சோதனை வெற்றிபெற்றதாகவும் கூறப்படுகிது.

ஏவுகனை சோதனை வெற்றிக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.