பிரமோஸ் ஏவுகணை சோதனை மீண்டும் வெற்றி: டிஆர்டிஓ அறிவிப்பு

டில்லி :

பிரமோஸ் அதிநவீன ஏவுகணை ஒடிசா கடற்கரை பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

200 கிலோ வெடிப் பொருளுடன் பாய்ந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட ’பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இதை இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் இதை உறுதி செய்துள்ளனர்.(Defence Research and Development Organisation (DRDO).)

3 ஆயிரம் கிலோ எடை கொண்ட சூப்பர் சோனிக் ஏவுகளை இந்தியா ரஷியா கூட்டுத்தயாரிப்பில் உருவாக்கப் பட்டது. இந்த ஏவுகணை மூலம் சுமார் 200 கிலோ வெடிப் பொருளுடன்    290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது.

ஏற்கனவே கடந்த கடந்த 2001-ம் ஆண்டு முதன் முதலாக பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டது.  அதைத்தொடர்ந்து அவ்வப்போது பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

ஒடிசா மாநிலம், பலசோர் மாவட்டத்தில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் உள்ள சாந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து இன்று  ’பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை  மீண்டும் பரிசோதிக்கப்பட்டது.

இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாக இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.