பாலசோர்,

திரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் அதிநவீன சூப்பர்சோனிக் ரக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.  இந்த அதிநவீன ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்தியா, பல்லிஸ்டிக் மிசைல் (கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் ஏவுகணை) மற்றும் ஆன்ட்டி பல்லிஸ்டிக் மிசைல் (கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்க வரும் ஏவுகணையை அழிக்கும் ஏவுகணை) போன்ற ஏவுகணைகளை சோதனை செய்து தனது ராணுவ வலிமையை உலக நாடுகளுக்கு இணையாக உயர்த்தி உள்ளது.

தற்போது இந்தியாவின் வலிமையை மேலும் உயர்த்தும் விதத்தில், அதிநவீன சூப்பர் சோனிக் ஏவுகணை தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணையின் சோதனை ஒடிசா மாநிலம் பால்சோர் பகுதியில் நடைபெற்றது.

விஞ்ஞானிகள் எதிர்பார்த்த படி குறிப்பிட்ட இடத்தை தாக்கி அழித்தது சூப்பர்சோனிக் ஏவுகணை.

இந்த சூப்பர்சோனிக் இன்டர்செப்டார் ரக ஏவுகணை  எதிரிநாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் படைத்தது. இந்த சோதனை வெற்றியடைந்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளன.

இந்த சோதனை வெற்றிபெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணையின் சிறப்பு என்ன?

இது ஏவுகணை  முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட  சூப்பர்சோனிக் ஏவுகணை.

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இடைமறிப்பு ஏவுகணையானது வங்காள விரிகுடாவில் நங்கூரமிடப்பட்டு இருக்கும் இந்திய கடற்படையின் ஒரு கப்பலில் இருந்து ஏவப்பட்ட ப்ரிதீவ் ஏவுகணையின் ஒரு பதிப்புக்கு எதிராக ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

இந்தியாவுக்குள் ஊடுருவும்  எந்த விதமான எதிரி நாடுகளின் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் அழிக்கும் திறன் கொண்டது.

இதை சோதனை செய்வதற்காக, இந்தியாவுக்குள்  வரும் இலக்கு ஏவுகணையானது காலை  11.15 மணிக்கு ஏவப்பட்டது, அதை ரேடார் மூலம் கண்டறிந்து கண்காணித்து அப்துல் கலாம் தீவில் இருந்து கிளம்பிய இடை மறிப்பு ஏவுகணை நடு வானில், எண்டோ- வளிமண்டல உயரத்தில் தாக்கி அழித்தது.

இந்த இடைமறிப்பு ஏவுகணையின் கில் எப்பெக்ட் ஆனது பல கண்காணிப்பு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவு மூல பகுப்பாய்வு செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இடைமறிப்பு ஏவுகணை – 7.5 மீட்டர் நீளமுள்ள ஒற்றை நிலை திட ராக்கெட் மூலம் வழிநடத்தப்படும் ஒரு ஊடுருவல் முறை பொருத்தப்பட்ட ஏவுகணையாகும்.

இது ஒரு ஹை-டெக் கணினி மற்றும் மின்னியக்க ஏவி மூலம் இயக்கப்பட்டது.

இந்த ஏவுகணையில் சொந்தமான மொபைல் லான்சர், சுயாதீன மற்றும் இயற்கைத் தன்மை கொண்ட கண்காணிப்பு திறன், அதிநவீன ரேடார்கள் மற்றும் பாதுகாப்பான தரவு இணைப்பு போன்றவைகளும் அடக்கம்.