டெல்லி:
ந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7லட்சத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் ரஷியாவை பின்னுக்குத்தள்ளி 3வது இடதுக்கு  வந்துள்ளது.

உலகம் முழுவதும்  கொரோனா பாதிப்புக்குள்ளோனோர் 1கோடியே 15லட்சத்து 71ஆயிரத்து 720 பேராக அதிகரித்துள்ளது.  இதுவரை 5,37,045 போ் பலியாகியுள்ளனா். 65,42,708 பேர் கொரோனா தொற்றில் இந்து மீண்டுள்ளனர்.  தற்போதைய நிலையில், 44,91,967 போ் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், இதுவரை கொரோனா பாதிப்பில் நான்காம் இடத்தில் இருந்த இந்தியா இன்று 3வது இடத்துக்கு வந்துள்ளது. ரஷியாவை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை இந்தியா கைப்பற்றி உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,248 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பு 7 லட்சத்து 724ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்றுக்கு இதுவரை 19,714 பேர் உயிரிழந்துள்ளனர். 4லட்சத்து, 25 ஆயிரத்து 568 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் ஒட்டுமொத்த பாதிப்பில் 78 சதவிகித  பாதிப்பு, மகாராஷ்டிரா, தமிழகம்,  டில்லி, குஜராத் உள்பட 7  மாநிலங்களில் உள்ளது. தேசிய அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது.
ரஷியாவில் 6,87,862 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 4,54,329 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா். கொரோனா நோய்த்தொற்று பாதிப்பில் உலகின் மூன்றாவது இடத்தில் இருந்த ரஷியாவில், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில்  10,161-ஆக அதிகரித்தது.
இந்த நிலையில், இன்று இந்தியாவில்  அதிக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், ரஷியாவை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்துக்கு வந்துள்ளது.
முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் பிரேசிலும் உள்ளது.