Random image

பாக்சிங் டே டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 151 ரன்களில் ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா!

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

india

அஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3டி20, 4டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போடிகளில் விளையாடி வருகிறது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து பெர்த் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது.

இதனை தொடர்ந்து இரண்டு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் முதல் இன்னிங்சில் 7விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்த இந்திய அணி போட்டியை டிக்ளேர் செய்தது.

இதை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடர்ந்த அஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதில் ஷான் மார்ஷ், ஹெட், பெயின், லியான் என வரிசையாக அஸ்திரேலிய அணி வீரர்களை ரன் எடுக்க விடாமல் பும்ரா வெளியேற்ரினார். இதையடுத்து, முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 151 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி பாலோ ஆன் பெற்றதும், இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை வகித்த நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.