கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அக்னி-IV ஏவுகனை ஒடிசாவில் பரிசோதனை செய்யப்பட்டது

அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்கும் அக்னி-IV ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் சோதனை செய்யப்பட்டது.

agni

ஒடிசா மாநிலத்தில் உள்ள சண்டிபூர் பலசோர் மாவட்டத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் ஏவுகணைகளை பரிசோதனை செய்யப்படும் ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் 4வது தளத்தில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் அக்னி-IV ஏவுகணை விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.

இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்துக் கொண்டு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கும் ஆற்றல் வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏழாவது முறையாக செய்யப்பட்ட இந்த சோதனை வெற்றிகரமாக முடிவடைந்தது.