சந்திப்பூர்,

ந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான நிர்பயா ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.

நீண்ட தூர ஏவுகணையை இந்தியா தயாரித்து வந்தது. இதற்கு நிர்பயா என்று பெயரிடப்பட்டது. இந்த ஏவுகணையின் சோதனை நேற்று பகல் 11.20 மணி அளவில் விண்ணில் ஏவி சோதிக்கப்பட்டது.

சுமார் 300 கிலோ எடையுடன் அதிகபட்சமாக ஆயிரம் கிலோமீட்டர் வரை சென்று தாக்க வல்ல நிர்பயா ஏவுகணை இந்தியாவின் 5-வது உள்நாட்டுத் தயாரிப்பு ஏவுகணையாகும்.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள  சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து நிர்பயா ஏவுகணை நேற்று பகல் விண்ணில் ஏவப்பட்டது. குறிப்பிட்ட இலக்கை தாக்கி வெற்றிபெற்றதாக சோதனையில் ஈடுபட்ட  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டு முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்ட 4 ஏவுகணைகளில் ஒன்று மட்டுமே வெற்றிபெற்றிருந்த நிலையில், தற்போது நிர்பயா வெற்றி பெற்றுள்ளது விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.