இந்திய தயாரிப்பான ருத்ரம் 1 ரேடார் அழிப்பு ஏவுகணை சோதனை வெற்றி…!

--

பாலசோர்: முற்றிலும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ருத்ரம்-1 என்ற ரேடார் அழிப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.

மத்திய ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள இந்த ஏவுகணையானது ஒடிசாவில் உள்ள பலசோர் கடற்கரையில் இருந்து ஏவப்பட்டது. ரேடார் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை துல்லியமாக தாக்கி அழிக்க வல்லது இந்த ருத்ரம் ஏவுகணை.

விமானத்திலிருந்து செலுத்தினால் நிலத்தில் 100 முதல் 250 கி.மீ தொலைவிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கும். ஒலியை விட 2 மடங்கு வேகம் கொண்ட ருத்ரம் ஏவுகணையை சுகோய் போன்ற போர் விமானங்களில் பொருத்தலாம்.

முன்னதாக, இலக்குகளை அதிவேகத்தில் சென்று தாக்கக்கூடிய அபியாஸ் ஏவுகணையை செப்டம்பர் 23ம் தேதியும் அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் வல்லமை படைத்த, அதிநவீன சவுரியா ஏவுகணை அக்டோபர் 3ம் தேதியும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.