உலக அளவில் தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவிற்கு 3வது இடம் – அமெரிக்க அறிக்கையில் தகவல்

உலக அளவில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் தொடர்ந்து 2வது ஆண்டாக இந்தியா உள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

encounter

உலக நாடுகளிடையே நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதல் குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் புள்ளிவிரவரங்களை சேகரித்து ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான அறிக்கையை கடந்த வியாழக்கிழமை அமெரிக்கா வெளியிடப்பட்டது.

அதில், உலக அளவில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பட்டியலில் ஈராக் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் 2வது இடத்திலும், 3வது இடத்தில் இந்தியாவும் உள்ளது. தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பட்டியலில் கடந்த ஆண்டும் இந்தியா 3வது இடத்தை பிடித்திருந்தது. இந்தியாவில் நடத்தப்படும் 53சதவிகித தீவிரவாத தாக்குதல்கள் மாவோயிஸ்டுகளால் நடப்பதாகும். உலக அளவில் உள்ள பயங்கரவாத தீவிரவாத அமைப்புளின் பட்டியலில் ஐஎஸ், தாலிபான், அல்-ஷபாப், மாவோஸ்டுகள் உள்ளிட்ட அமைப்புகள் உள்ளன “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 24 சதவிகிதம் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. 2017ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 860 தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் 25சதவிகித தாக்குதல்கள் காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்டவையாகும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியா தரப்பில் தெரிவிப்பதாவது, ” தீவிரவாத விஷயத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இந்தியாவில் தீவிரவாதத்தில் ஈடுபடுவோர், பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படுகின்றனர். அல்லது அங்கிருந்து ஏவி விடப்பட்டவர்களாக உள்ளனர். ஆனால், பாகிஸ்தான் கடந்த பல ஆண்டுகளாக வளர்த்து விட்ட, ஆதரித்த தீவிரவாதிகளே அங்கு தாக்குதல்கள் நடத்துகின்றனர் “ என்று தெரிவிக்கப்பட்டது.