மகளிர் T20 ஆசிய கோப்பை: இந்திய மகளிர் அணி வெற்றி

26-india-womenதாய்லாந்து நகரில் மகளிருக்கான T20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சனிக்கிழமை இந்திய – வங்கதேச மகளிர் அணியினர் விளையாடினர். முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 118 ரன்கள் சேர்த்தது. இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 49 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 41 ரன்களும் எடுத்தனர்.

119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணி, இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.2 ஓவர்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 54 ரன்களில் சுருண்டது. இந்திய பவுலர்கள் பூனம் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜுலான் கோஸ்வாமி, அனுஜா பாட்டீல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.