இனி சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை, நாடு தன்னம்பிக்கையுடன் பெரும் முன்னேற்றம் காணும்… நிதின்கட்கரி

டெல்லி:
நெடுஞ்சாலை திட்டப் பணிகளில் இனி சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர்  நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் மோடியின் தலைமையிலான ஆட்சியின் கீழ் நாடு தன்னம்பிக்கையுடன் முன்னேற்றம் காணும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

காஷ்மீர் மாநிலம் லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில்,  இந்திய ராணுவத்துக்கும், சீன ராணு வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.  இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், சீனப் பொருட்களை புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். . இதன் தொடர்ச்சியாக, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த 59 சீன மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  இந்தியாவில் நடைபெறும் அனைத்து நெடுஞ்சாலை பணிகளுக்கு சீனா நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது எனவும், அது கூட்டுத் திடமாக இருந்தாலும் அனுமதி கிடையாது என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) போன்ற பல்வேறு துறைகளில் சீன முதலீட்டாளர்கள் இனிமேல் அனுமதிகப்படமாட்டார்கள்.

நெடுஞ்சாலைத் திட்டங்களில் பங்கேற்பதற்கான தகுதிக்கான அளவுகோல்களை விரிவுபடுத்து வதற்காக சீன நிறுவனங்களைத் தடைசெய்வதும், இந்திய நிறுவனங்களுக்கு விதிமுறைகளை தளர்த்துவதும் ஒரு கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

இந்திய பணிகளில் சீனா பங்கேற்க முடியாதவாறு, எதிர்காலத்தில், டெண்டர்களில் புதிய முடிவு செயல்படுத்தப்படும். தற்போதுள்ள டெண்டர்கள் மற்றும் எதிர்கால ஏலங்களைப் பொறுத்தவரை, சீன கூட்டு முயற்சிகள் ஏதேனும் இருந்தால், அவை  மறுதலிப்பு செய்யப்படும். சீன நிறுவனங்கள்  ஏலம் எடுப்பதில் தகுதி இருந்தாலும், அது பங்குபெறாதவாறு,  உறுதி செய்வதற்கான விதிமுறை களை தளர்த்த நாங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளோம்.

தொழில்நுட்ப மற்றும் நிதி விதிமுறைகளை தளர்த்துவதற்காக ஒரு கூட்டத்தை நடத்துமாறு நெடுஞ்சாலை செயலாளர் (கிரிதர் அரமனே) மற்றும் என்.எச்.ஏ.ஐ தலைவர் (எஸ்.எஸ்.சந்து) ஆகியோருக்கு நான் அறிவுறுத்தி இருக்கிறேன்.

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் இழப்பை சரி செய்ய,   இந்தியாவின் வளர்ச்சி என்பது பொருளா தாரம், உள்கட்டமைப்பு வசதிகள், மக்கள் சக்தி, உற்பத்தி தேவை, தொழில்நுட்பம் ஆகிய 5 அம்சங்களை  ‘ஆத்மனிர்பார் பாரத் அபியான்’ என்ற  திட்டத்தின்மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மேம்படுத்தப்படும்.

தற்போதைய விதிமுறைப்படி, ஒரு ஒப்பந்தக்காரர் ஒரு சிறிய திட்டத்திற்கு தகுதி பெற முடிந்தால், அவர் ஒரு பெரிய திட்டத்திற்கும் தகுதி பெற முடியும். அதுபோல கட்டுமான விதிமுறைகள் நல்லதல்ல, எனவே அதை மாற்றும்படி கேட்டுள்ளேன். இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நாங்கள் அதை மாற்றுகிறோம்” என்று தெரிவித்தார்.

“தொழில்நுட்பம், ஆலோசனை அல்லது வடிவமைப்பு போன்ற துறைகளில் வெளிநாட்டு கூட்டு முயற்சிகளுக்கு நாங்கள் செல்ல வேண்டியிருந்தாலும், நாங்கள் சீனர்களை அனுமதிக்க மாட்டோம்” என்று உறுதியபடுத்தி அமைச்சர், உள்ளூர் உற்பத்தியின் திறனை மேம்படுத்துவதே இந்த முயற்சி, ஆனால்,  அதே நேரத்தில் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்..

இருப்பினும், அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் முடிவு இருந்தபோதிலும், சீன முதலீட்டாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை மீண்டும் தெளிவுபடுத்தினார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது ஊக்கமளிக்கப்படாது என்றும், நாடு தன்னம்பிக்கை யுடன் பெரும் முன்னேற்றம் காணும் ” “இந்திய வணிகம்  மேலும் வளரவும், தன்னம்பிக்கையை நோக்கிய நமது பயணத்தை தொடரும் ஆற்றலும்,  பலமும் திறமையும் உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான தலைமையின் கீழான, இந்திய அரசு செயல்திறன் மிக்கது.  அரசு, வணிகங்கள் மற்றும் எம்எஸ்எம்இக்களுக்கு உதவும் பாதையை உருவாக்கும் சீர்திருத்தங்களைத் தொடங்குகிறது.

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள உள்நாட்டு தொழில்துறைதான் நமக்கு பெருமளவில் உதவியது. ஏழை எளிய மக்கள் கொரோனா பாதிப்பை துணிச்சலாக எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.