உலகின் நம்பர் 1 நாடாக ஆகப்போகிறது இந்தியா!

க்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்து  இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா, விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய உலக மக்கள் தொகை 7.6 பில்லியனானது. இது  2030ம் ஆண்டில் 8.6 பில்லியனாக வும், 2050 ம் ஆண்டில் 9.8 பில்லியனாகவும், 2100 ம் ஆண்டில் 11.2 பில்லியனாகவும் உயரும் என ஐக்கிய நாடுகள் சபை ஆய்வு செய்து அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 83 மில்லியன் மக்கள் சேருவதாக வும், இதன் காரணமாக  மக்கள்தொகை அளவு அதிகரிப்பு தொடரும் என்று என்றும் ஐ.நா. கூறியுள்ளது.

ஐ.நா. சமீபத்தில் வெளியிட்டுள்ள,  பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் குறித்த ஆய்வறிக்கையில் இந்த விவரங்கள் கூறப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் உலகளாவிய மக்கள்தொகை அதிகரிப்பு, இதன் காரணமாக எடுக்கப்பட வேண்டிய வளர்ச்சி, வழிகாட்டுக்கள் குறித்து ஐ.நா. விரிவான ஆய்வு மேற்கொண்டது. அதன் விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை தரவரிசை:

தற்போது மக்கள் தொகையில் தீனா உலகின் நம்பர் 1ஆக திகழ்கிறது. அதையடுத்து இந்தியா தொடர்கிறது.   சீனா (1.4 பில்லியன் மக்களுடன்) , இந்தியா (1.3 பில்லியன் மக்களுடனும்), உலகின் மொத்த மக்கள் தொகையில் 19% மற்றும் 18% மக்களை தொக கொண்டுள்ளது.

கடந்த  ஏழு ஆண்டுகளில் அல்லது 2024 ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை விட அதிகமாக இருக்கும் என்று ஐ.நா.சபையின் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

இந்த ஆய்வறிக்கையில், மக்கள் தொகை வளர்ச்சியில் உலக நாடுகளில் நைஜீரியா வளர்ச்சி அபரிதமாக இருப்பதாகவும் கூறி உள்ளது.

இதன் விளைவாக, தற்போது நைஜீரியாவின் மக்கள்தொகை 7 வது இடத்தில் உள்ளது.  இது அமெரிக்காவை விட அதிகமாகும்.

வரும் 2050 ம் ஆண்டுக்கு முன்னர் உலகின் மூன்றாவது மிகப்பெரிய நாடாக நைஜீரியா மாறிவிடும் என எதிர்பார்ப்பதாக ஐ.நா. ஆய்வுகள் கூறியுள்ளது.