11157‘U-20’ 20 வயதுக்கு உட்பட்டோர் விளையாடும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2019-ல் நடைபெற உள்ளது. இந்தப்போட்டியை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதைப்பற்றி FIFA குழுவிடம் இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ப்ரஃபுல் படேல் தெரிவித்துள்ளார்.

2017-ல் ‘U-17’ 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. இதனால் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டியை நடத்தும் முனைப்பில் இந்திய கால்பந்து சங்கம் முனைப்பில் உள்ளது.