தாவூத் இப்ராகிம் கூட்டாளியை பிடிக்க இந்தியா முயற்சி : தடுக்கும் பாகிஸ்தான்

ண்டன்

தாவுத் இப்ராகிம் கூட்டாளியான ஜாபிர் சித்திக்கை பிடித்து இந்தியா கொண்டு வரும் முயற்சிக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தாவூத் இப்ராஹிம் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக உள்ளார். அவர் பாகிஸ்தான் நாட்டில் தலை மறைவாக உள்ளதாக இந்தியாவின் குற்றச்சாடை ஆக் மறுத்து வருகிறது. அமெரிக்கா இந்தியாவின் கோரிக்கையை ஏற்று தாவுத் இப்ராஹிம் ஒரு சர்வதேச பயங்கரவாதி என அறிவித்துள்ளது.

தாவூத் இப்ராகிம் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கை நடந்து வருகிறது. இந்த நிலையில் தாவூதின் முக்கிய கூட்டாளியான ஜாபிர் சித்திக் எனப்படுபவர் லண்டனில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். ஜாபிரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தி கொண்டு வந்து விசாரிக்க வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது ஜாபிர் வீட்டின் அருகே தாவுத் வசித்து வருவது டெரிய வந்துள்ளது.

அதையொட்டி தாவூதின் இருப்பிடம் குறித்து அறிய ஜாபிர் சித்திக்கை இந்தியாவுக்கு அழைத்து வர மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜாபிரின் பாகிஸ்தானிய வழக்கறிஞர் இந்திய சிறைகளில் ஜாபீருக்கு வசதி போதுமான வசதி இல்லை எனவும் அவரை இந்தியாவுக்கு அனுப்புவது மனித உரிமை மீறிய செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

அதை ஒட்டி இந்திய அரசு சார்பில் இந்த விசாரணையில் எவ்வித மனித உரிமை மீறலும் நடைபெறாது என உறுதி மொழி அளிக்க உள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியா மூன்று வழக்குகளில் இவ்வாறு உறுடி அளித்துள்ளது.