Random image

” 60 பில்லியன் செலவில் இந்தியாவில் 100 விமான நிலையங்கள் கட்டப்படும் ” – விமான போக்குவரத்துறை அமைச்சர்

அடுத்த 15 ஆண்டுகளில் 60 பில்லியன் செலவில் இந்தியாவில் 100 விமான நிலையங்கள் கட்டப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார். போக்குவரத்து துறையில் இந்தியா இரட்டை இலக்கில் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

india-construct-100-ariports-in-india

செய்தியாளர்களிடம் பேசிய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, ” இந்தியாவில் 60 பில்லியன் ( ரூ.4.2 லட்சம் கோடி) செலவில் நூறு விமானங்கள் நிலையங்கள் கட்டப்பட உல்ளன. இவை கிட்டத்தட்ட 10 லிருந்து 15 ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் விமான போக்குவரத்து உலக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 50 மாதங்களில் இந்தியாவின் போக்குவரத்து துறை இரட்டை இலக்குகளில் வளர்எசி பெற்றுள்ளது“ என்று கூறினார்.

மேலும், இந்தியா முழுவதும் கட்டப்படும் நூறு விமான நிலையங்கள் தனியார் மற்றும் பொது துறையின் உதவிகளுடன் 15 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் எனவும் பிரபு தெரிவித்தார். இதற்கான கார்கோ பாலிசி பணிகளையும் இந்தியா மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.