இந்தியாவில் 6,500 எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் ஏற்றும் மையங்கள் அமைக்கப்படும்

மும்பை:

அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் 6,500 எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் ஏற்றும் மையங்கள் நிறுவப்படும், என்று EV மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த மையங்கள், 200 மில்லியன் டாலர் முதலீட்டில், டிஎல்எப், ஏபிபி இந்தியா மற்றும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவங்களுடன் இணைந்து அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று EV மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.

பிளக் ன் கோ (PlugNgo) என்ற பெயரிடப்பட்ட சார்ஜ் ஏற்றும் மையங்கள், அனைத்து நகரங்களிலும் உள்ள வணிக வளாகங்களிலும் குடியிருப்பு வளாகங்களிலும் நிறுவப்படும். அவ்வாறு அமைக்கப்படும் நிலையங்கள் ஒருங்கிணைந்த மென்பொருள் தளத்துடன் இணைக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வருடத்திற்குள், டெல்லியில் 20 PlugNgo நிறுவப்படும். அதை தொடர்ந்து, பெங்களூரு, சண்டிகர், ஜெய்ப்பூர், அகமதாபாத், கான்பூர், கொல்கத்தா, மும்பை, புனே, ஹைதெராபாத், அம்ரித்சர், புவனேஸ்வர், கொச்சின், இண்டோர், மற்றும் சென்னை போன்ற நகரங்களிளும் அமைக்கப்படும்.

அனைத்து வகையான டூ வீலர், த்ரீ வீலர், கார் மற்றும் பஸ்களுக்கு பொருத்தமான சார்ஜ் ஏற்றும் உபகரணங்கள் பொருத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி