டில்லி

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு இந்தியா 80% வரை இறக்குமதி தேர்வையை குறைக்க உள்ளது.

தெற்காசிய நாடுகளான இந்தியா, சீனா,ஜப்பான் கொரியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து தெற்காசிய நாடுகள் வர்த்தகக் குழு ஒன்றை அமைந்துள்ளன.   இந்த நாடுகளின் வர்த்தக முன்னேற்றக் கூட்டம் டில்லியில் நடந்தது.  அந்தக் கூட்டத்தில் இந்த நாடுகளுக்கு இடையே ஆன இறக்குமதி தீர்வையை ரத்து செய்வது மற்றும் குறைப்பது குறித்து ஆலோசனை நடந்தது.

இந்த ஆலோசனையில் சீனா தங்கள் இறக்குமதி பொருட்களுக்கான தீர்வையை ரத்து செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.  அந்த பேச்சு வார்த்தையில் இறக்குமதி தீர்வையை குறைப்பது பற்றி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பேச்சுவார்த்தையில் சீனாவுக்கு இறக்குமதி தீர்வையில் 80% மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் நியுஜிலாந்து நாடுகளுக்கு 86% மற்றும் ஆசிஏன், ஜப்பான், மற்றும் தென் கொரியாவுக்கு 90% விலக்கு அளிக்க இந்தியா ஒப்புக் கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த இறக்குமதி தீர்வையில் சீனாவுக்குக் குறைந்த அளவில் விலக்கு அளிக்கப் பட்டிருந்த போதிலும் சீனப் பொருட்கள் விலைக்குறைவு என்பதால் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படலாம் எனவும் இதனால் சீனாவுக்கு அதிக அளவில் சலுகை கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதில் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு இறக்குமதித் தீர்வையில் உடனடியாக 28% விலக்கு அளிக்கப்பட உள்ளது.   மற்றவற்றுக்கு 5, 10, 15 ,மற்றும் 20 வருடங்களில் சிறிது சிறிதாக இறக்குமதி தீர்வை குறைக்கப்பட உள்ளன.