மலேசியாவிலிருந்து மீண்டும் பாமாயில் இறக்குமதி

--

மும்பை :

லேசியாவில் இருந்து பாமாயில் வாங்குவதை இந்த ஆண்டு துவக்கத்தில் நிறுத்திவைத்த இந்திய அரசு.

தற்போது உள்நாட்டு தேவை அதிகரிப்பு மற்றும் பாமாயில் கையிருப்பு குறைந்துவருவதால், மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதியை இந்திய வணிகநிறுவனங்கள் மீண்டும் துவங்கியுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

உலகில் பாமாயில் உற்பத்தியில் முதலிடத்தில் இந்தோனேஷியா இருக்கிறது இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் மலேசியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாத காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்டதில் 50 விழுக்காடு மட்டுமே இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்ய படுவதாக தெரிகிறது.

அதுபோல், கடந்த 10 மாதங்களாக பாமாயில் ஏற்றுமதி மூலம் கிடைத்த வருமானம் குறைந்துள்ளதால், உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியா, தனது வியாபாரத்தை புதுப்பித்திருப்பது, மலேசியாவுக்கு மகிழ்ச்சியூட்டுவதாக உள்ளது.