Random image

சீனாவை தாக்க வல்ல முதல் பேட்ச் அக்னி 5 ஏவுகணை விரைவில்

டில்லி

ண்டம் விட்டு கண்டம் தாக்கும் திறனுள்ள அக்னி 5 ஏவுகணையின் முதல் வரிசையை இந்திய ராணுவம் விரைவில் அறிமுகம் செய்கிறது.

ஏவுகணை தயாரிப்பில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் வட கொரியா நாட்டு ராணுவத்தினரிடம் மட்டுமே கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகள் உள்ளன.   இந்த வரிசையில் இந்தியா தனது அக்னி ஏவுகணைகளை உருவாக்கி பரிசோதித்து வருகிறது.   இந்தியா தனது ராணுவத்தில் அக்னி 1 ஏவுகணை 700 கிமீ தூரம் தாக்கும் திறன் கொண்டதை சேர்த்தது.  அதன் பிறகு இவ்வரிசையில் அக்னி 2 – 2000 கிமீ, அக்னி 3 – 25000 கிமீ மற்றும் அக்னி 4 – 3500 கீமீ தூரம்  தாக்க வல்ல ஏவுகணைகள் சேர்க்கப்பட்டன.

தற்போது அக்னி 5 என்னும் ஏவுகணை சேர்க்கப்பட உள்ளது.  இந்த ஏவுகணை இது வரை 5 முறை சோதிக்கப்பட்டு வெற்றி அடைந்துள்ளது.    இந்த ஏவுகணையின் மூலம் சுமார் 5000 கிமீ தூரம் உள்ள இடத்தை குறி வைத்து தகர்க்க முடியும்.   சரியாக சொல்லப் போனால் அண்டை நாடான சீனாவின் ராணுவ தளங்களை இந்த அக்னி 5 ஏவுகணை தாக்கும் வல்லமை கொண்டது.

இந்த ஏவுகணைகளின் முதல் வரிசையை விரைவில் இந்திய ராணுவத்தில் சேர்க்க அரசு திட்டமிட்டுளது.   இந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று அதன் மூலம் தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டவைகள் ஆகும்.    இந்தியாவின் எல்லைப்புற நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் இந்த அக்னி 5 ஏவுகணைகள் விரைவில் சேர்க்கபட உள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.