2019 உலககோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா

கொல்கத்தா:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனை கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் 2019ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் முதல் ஆட்டம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி இங்கிலாந்தில் 2019 ஜூன் 4ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகளின் முழு அட்டவணை ஏப்ரல் 30ம் தேதி வெளியிடப்படவுள்ளது.

இந்தியாவின் முதல் போட்டி ஜூன் 2ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. லோதா கமிட்டி பரிந்துரையின் படி ஐபிஎல் போட்டிக்கும் சர்வதேச போட்டிக்கும் இடையே 15 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். இதன் காரணமாக ஜூன் 4ம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு ஐபிஎல் போட்டி மார்ச் 29ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.