ரஷ்யாவிடம் இருந்து புதிய ஏவுகணை வாங்கும் இந்தியா

டில்லி

ஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைகளை வாங்க ரஷ்ய அதிபரிடம் இந்தியா ஒப்பந்தம் இட உள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்தது.  எஸ் 400 ஏவுகணை என்பது வானில் பறந்து செல்லும் பொருட்களை 400 கிமீ தூரத்தில் இருந்து துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும்.   இந்த முடிவு கடந்த 2015 ஆம் வருடம் எடுக்கப்பட்டது.

சென்ற மாதம் இந்த ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்கக்கூடாது என அமெரிக்கா இந்தியாவுக்கு தடை விதித்தது.   மேலும் மீறி வாங்கினால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனவும் மிரட்டி இருந்தது.  இந்நிலையில் இந்த மாதம் 4 மற்றும் ஐந்தாம் தேதி அன்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியப் பயணம் மேற்கொள்கிறார்.

இது குறித்து புதினின் வெளிநாட்டுத் துறை செயலர் யூரி உஷாகோவ், “அதிபர் புதின் நாளை (4ஆம் தேதி) இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.   இந்த பயணம் இந்தியாவுடன் எஸ் 400 ஏவுகணை விற்பனை செய்ய ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்காக நடைபெறுகிறது.   இந்த ஒப்பந்தத் தொகை 5 பில்லியன் டாலராகும்.   (அதாவது இந்திய மதிப்பில் ரூ.36,665 கோடி) ஆகும்.   அது தவிர இந்தியாவுடன் வேறு சில பாதுகாப்பு குறித்த ஒப்பந்தங்களிலும் புதின் கையெழுத்திட உள்ளார்” என தெரிவித்துள்ளார்.