உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: முதலிடம் பிடித்து இந்தியா சாதனை

மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

சர்வதேச சூட்டிங் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் சார்பில் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடர் மெக்சிகோவில் உள்ள கவுடலஜாரா நகரில்  நடத்தப்பட்டு வருகிறது. மார்ச் 1ந்தேதி தொடங்கிய இந்த போட்டி நேற்றுடன் (12ந்தேதி)  முடிவடைந்தது.

இந்த போட்டியில் உலக நாடுகள் பல கலந்துகொண்டு பங்கேற்ற நிலையில், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த போட்டியில்,  4 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 8 பதக்கங்களை பெற்று,பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுச் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது இது முதல் முறை.

இந்தப் போட்டியில் ஷாஸார் ரிஸ்வி, அகில் ஷியோரன், ஓம் பிரகாஷ் மிதர்வால் ஆகிய வீரர்களும், மானு பேக்கர் என்ற வீராங்கனையும் தங்கம் வென்றனர்.

வெள்ளியை அஞ்சும் முட்கில் என்ற வீராங்கனை கைப்பற்ற, ஜிது ராய், ரவி குமார் உள்ளிட்ட 3 பேர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

கார்ட்டூன் கேலரி