உலககோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் முதலிடத்தில் இந்தியா! 3வது தங்கத்தை வென்ற இந்திய வீரர் திவ்யன்சிங் பன்வா

பீஜிங்:

சீனாவில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் திவ்யன்சிங் பன்வாக்கு தங்கம் வென்றுள்ளார். இதன் காரணமாக இந்தியா 3 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் சீனாவின் புதியான் நகரில் நடைபெற்று வருகின்றன. மகளிருக்கான 10 மீட்டர் ஜூனியர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த 17 வயதான மனு பாக்கர் தங்கம் வென்றார். அதுமட்டுமின்றி 244.7 புள்ளிகளை பெற்ற அவர், இளையோர் பிரிவில் உலக அளவில் புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

அதுபோல தமிழக வீராங்கனை 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வளரிவான் 0.1 புள்ளிகளில்  தங்கம் வென்றுள்ளார்.

இந்த நிலையில், இந்திய வீரர் திவ்யன்சிங் பன்வாருக்கு தங்கம் வென்றுள்ளார்.

இதன் காரணமாக இந்தியா 3 தங்கப்பதக்கங்களுடன் பதக்கப் பட்டியிலில் முதலிடத்தில் உள்ளது.