புதுடெல்லி:
கொரோனா பாதிப்பில் முதல் 10 இடங்களில் உள்ள ஆசிய நாடுகள் பட்டியலில் இந்தியா முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 58 ஆயிரத்தை தாண்டிய நிலையில், உயிரிழப்பு 4 ஆயிரத்து 531 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவில் படி, இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 531 ஆக உயர்வடைந்துள்ளது. 67 ஆயிரத்து 691 பேர் குணமடைந்தும், 86 ஆயிரத்து 110 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 767 இல் இருந்து 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 ஆக உயர்வடைந்து உள்ளது.