ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசை – இந்தியா முதலிடம்!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை, 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளதையடுத்து, ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பெற்றுள்ளது.

இந்திய அணி பெற்றுள்ள புள்ளிகளின் எண்ணிக்கை 122.

இரண்டாமிடத்திலுள்ள நியூசிலாந்து அணி பெற்றுள்ள புள்ளிகளின் எண்ணிக்கை 118.

மூன்றாமிடத்திலுள்ள ஆஸ்திரேலியா பெற்றுள்ள புள்ளிகளின் எண்ணிக்கை 113.

நான்காமிடத்திலுள்ள இங்கிலாந்து பெற்றுள்ள புள்ளிகளின் எண்ணிக்கை 105.

அடுத்தடுத்த இடங்களில், பாகிஸ்தான்(90), தென்னாப்பிரிக்கா(89), இலங்கை(83), விண்டீஸ்(80), ஆப்கானிஸ்தான்(57), வங்கதேசம்(51) ஆகிய அணிகள் உள்ளன.