மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்

கார்த்திகேய சிவசேனாபதி (Karthikeya Sivasenapathy ) அவர்களின் பதிவில் இருந்து

beef

விலங்குகளை  துன்புறுத்தக்கூடாது என்று போராடி வருகின்றன, இந்திய விலங்கு நல வாரியமும், ப்ளூ கிராஸ் அமைப்பும்.

தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு கூட, காளைகளை வதைப்பதாக இருக்கிறது என்று நீதிமன்றம் போய் தடை வாங்கின.

இந்த நிலையில் ஒரு தகவல்:

கடந்த  ( 2015 – 16 ) நிதி ஆண்டில் இந்தியாவில் இருந்து மாட்டிறைச்சி ஏற்றுமதி எவ்வளவு தெரியுமா..

65000 கோடி  ரூபாய்!

இன்னொரு முக்கியமான விசயம்..

“இந்துத்துவ காவலர்” மோடி பிரதமான பிறகு, மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகியலேயே முதலிடத்தை  பிடித்திருக்கிறது இந்தியா.

2015 ம் வருடம் 2.4 மில்லியன் மாட்டிறைச்சியை நமது நாடு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது . இதே காலகட்டத்தில்  பிரேசில் 2 மில்லியனும் ஆஸ்திரேலியா 1.5 மில்லியனும் மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன. இந்த மூன்று நாடுகள் மட்டும் 58.7 சதவீதம் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் அங்கம் வகிக்கின்றன.

பசுவை தெய்வமாக வணங்குகிறோம் என்பவர்களின் ஆட்சியில் நமது நாடு  மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 23.5 சதவீதம்  வகிக்கிறது.

விலங்கை பாதுகாக்க துடிப்பவர்களுக்கும், பசுக்களை புனிதம் என்பவர்களுக்கும் இந்தத் தகவல் தெரியுமா?