இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டிகளின் அட்டவணை வெளியீடு!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள போட்டிகளின் அட்டவணை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் அடுத்தக்கட்டமாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

ind

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகள் நவம்பா் 21ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தற்போது போட்டிகளின் அட்டவணை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

டி20 தொடா்:

நவம்பா் 21ம் தேதி பிரிஸ்பா்ன் நகரில் பகல் 2.30 மணிக்கு முதல் போட்டி நடைபெறும்.

நவம்பா் 23ம் தேதி மெல்பா்ன் நகரில் பகல் 1.30 மணிக்கு இரண்டாவது போட்டி தொடங்கும்.

நவம்பா் 25ம் தேதி சிட்னி நகரில் பகல் 1.30 மணிக்கு மூன்றாவது போட்டி நடைபெற உள்ளது.

டெஸ்ட் தொடா்:

டிசம்பா் 6-10ம் தேதி வரை நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட், ஓவல் மைதானத்தில் காலை 6 மணிக்கு தொடங்குகிறது.

டிசம்பா் 14-18 வரை நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பொ்த் மைதானத்தில் காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

டிசம்பா் 26-30 வரை நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டி மெல்போா்ன் நகரில் காலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

ஜனவாி 3-7 வரை நடைபெறும் கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் காலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

ஒருநாள் போட்டி:

ஜனவரி 12ம் தேதி முதல் ஒருநாள் போட்டி சிட்னி நகாில் காலை 8.50 மணிக்கு தொடங்குகிறது.

ஜனவரி 15ம் தேதி 2வது போட்டி ஓவல் மைதானத்தில் காலை 9.20 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

ஜனவரி 18ம் தேதி 3வது மற்றும் மெல்போா்ன் நகரில் காலை 8.50 மணிக்கு தொடங்குகிறது.

டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் விபரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷா்மா, ஷிகா் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயஸ் ஐயா், மணிஷ் பாண்டே, தினேஷ் காா்த்திக், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், சாஹல், வாஷிங்டன் சுந்தா், குர்ணல் பாண்டியா, புவனேஷ்வா் குமாா், பும்ரா, உமேஷ் யாதவ், கலீல் அகமது.

டெஸ்ட் அணியில் பங்கேற்கும் வீரர்களின் பெயர்கள்:

விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ரோகித் ஷா்மா, லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, சடேஷ்வா் புஜாரா, அஜங்கியா ரகானே, ஹனுமன் விஹாரி, ரிஷப் பண்ட், பாா்த்திவ் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மொகமத் ஷமி, இஷாந்த் ஷா்மா, உமேஷ் யாதவ், பும்ரா, புவனேஷ்வா் குமாா்.