Random image

உ.பி.யில் அதிர்ச்சி: குடிபோதையில் தூங்கிய ஸ்டேஷன் மாஸ்டரால் ரெயில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

முர்ஷாத்புர்:

குடிபோதையில் தூங்கிய ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டரால் ரெயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரபிரதேசத்தில் பிஜ்னார் மாவட்டத்தில் உள்ள முர்ஷாத்புர் ரெயிவே நிலை யத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி வருபவர் தீப் சிங். சம்பவத்தின்போது, அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால், ரெயில் நிலையத்தினுள்ளேயே தூங்கி விட்டார்.

போதையில் தூங்கிய ஸ்டேஷன் மாஸ்டர் தீப்சிங்

இதன் காரணமாக அந்த வழியே வரும் மற்றும் போகும் ரெயில்களுக்கு சரியான சிக்னல் கிடைக்காததால், ரெயில் சேவை முடங்கியது.  இதன் காரணமாக ரெயில்வே ஊழியர்கள் குழப்பம் அடைந்தனர்.  ரயில்களும் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன.

இதன் காரணமாக ரெயில் பயணத்திற்கு காந்திருந்த பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள்,  முர்ஷத்புர் ரயில்வே நிலையத் தின் ஸ்டேஷன் மாஸ்டர் தீப் சிங் மதுபானம் அருந்தி மயக்க நிலையில் உறங்கிய தாக குற்றம் சாட்டுகிறார்கள். அதையடுத்து தீப்சிங் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது துறை சார்ந்த விசாரணையும் தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரி கூறும்போது, முர்ஷாத்புர் வழியாக செல்ல வேண்டிய எந்தவொரு ரெயிலுக்கும்  கிடைக்காததால்  அதிர்ச்சி அடைந்த நாங்கள், உடனடியாக முர்ஷாத்புர் ரெயில் நிலையத்தை தொடர்புக் கொள்ள முயற்சித்தோம். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.

இதயடுத்து நான் உடனே முர்ஷாத்புர்  ரயில் நிலையத்துக்கு விரைந்தேன். அங்கு சென்று பார்த்தபோது, தீப் சிங் அங்குள்ள ஒரு பலகையில் உறங்கிக் கொண்டி ருந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரை உடடினயாக அழைத்துச்சென்றுமருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அவர் மது அருந்தியது கண்டறியப்பட்டது என்று அதிகாரி கூறி உள்ளார்.

அதைத்தொடர்ந்து மாற்று அதிகாரிகளை கொண்டு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக அந்த வழியாக சென்ற ரெயில்கள் அனைத்தும் பல மணி நேரம் தாமதமாக சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்டேஷன் மாஸ்டர்,  தான் மது அருந்த வில்லை என்றும்,  எனக்கு தொடர் இருமல் இருந்து வருவதால்,  அதற்கான மருந்தை எடுத்து வருவதாகவும்,. சம்பவத்தின்போது அதிக இருமல் ஏற்பட்டதால், இருமல்  மருந்தை  அதிகமாக அருந்திவிட்டேன். இதன் காரணமாக உறங்கி விட்டேன் என்றும் கூறி உள்ளார்.