இந்தியா-அமெரிக்கா ராணுவ கூட்டு பயிற்சி நிறைவு

--

டில்லி:

இந்தியா-அமெரிக்கா ராணுவ கூட்டு பயிற்சி முடிவடைந்தது.

உத்தரகாண்ட் மாநிலம் சவுபாட்டியா மலையடிவாரத்தில் இந்தியா-அமெரிக்கா ராணுவ கூட்டுப் படைகள் கடந்த 16-ம் தேதி முதல் தீவிர போர் பயிற்சி மேற்கொண்டன.

2004-ம் ஆண்டில் இந்தியா-அமெரிக்கா இடையிலான ராணுவ ஒப்பந்த அடிப்படையில் 4வது முறையாக நடைபெற்ற இந்த போர் பயிற்சியில் இந்திய ராணுவத்தை சேர்ந்த முதலாவது பட்டாலியன் படைப்பிரிவு வீரர்களும், அமெரிக்க ராணுவத்தின் 23-வது பட்டாலியன் படைப்பிரிவு வீரர்களும் பங்கேற்றனர்.

பயிற்சியின் போது மறைந்திருந்து தாக்குதல், மலையேற்றம் போன்ற பல்வேறு கடுமையான பயிற்சிகளை இருநாட்டு வீரர்களும் மேற்கொண்டனர். மலைகளின் மீதேறி எதிரிப் படைகளின் பதுங்குக்குழிகளை அழிப்பதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. அமெரிக்க ராணுவ மேஜர் வில்லியம் கிரஹாம் மற்றும் இந்தியாவின் மேஜர் ஜெனரல் கபீந்திரசிங் உள்ளிட்டோர் இந்தப் பயிற்சிகளை பார்வையிட்டு வந்தனர். இன்றுடன் இப்பயிற்சி முடிவடைந்தது.

You may have missed