நாங்கள் கோட்டைவிட்டதை இந்திய அணி பிடித்துக்கொண்டது: ஜோ ரூட்

அகமதாபாத்: இந்த டெஸ்ட் தொடரில், நாங்கள் பயன்படுத்த தவறிய வாய்ப்புகளை, இந்திய அணி சிறப்பாக பயன்படுத்தியது என்றுள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்.

மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 3-1 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது இங்கிலாந்து அணி. அதிலும் கடைசி டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

இதுகுறித்துப் பேசியுள்ள இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், “ஆட்டத்தை எங்களின் பக்கம் திருப்புவதற்கு எங்களுக்கு சில வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அவற்றை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

ஆனால், இந்திய அணி அத்தகைய முக்கிய தருணங்களை, கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக கையாண்டது. அதை செய்யும் திறமை இந்திய அணிக்கு இருந்தது.

இந்த தொடர் எங்களுக்கு ஏமாற்றமாக அமைந்துவிட்டது. ஆனாலும், ஒரு அணியாக எதிர்வரும் நாட்களை சிறப்பாக எதிர்கொள்ள திட்டமிடுவோம்” என்றார் ஜோ ரூட்.