ஹிட்மேன் ரோஹித் தலைமையில் முதல் டி20 போட்டி இன்று ஆரம்பம்!!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

1st

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், இரவு 7 மணிக்கு முதல் டி20 போட்டி தொடங்குகிறது.

இந்திய அணியில் கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். தோனி அணியிலிருந்து நீக்கப்பட்டு பண்ட் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் டேரன் பிராவோ, பிராத்வெயிட் மற்றும் பொல்லார்டு போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளதால், ஆட்டம் அதிரடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.