இந்தியா – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட் : ஆப்கானிஸ்தான் ஃபாலோ ஆன்

 

பெங்களூரு

ந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 109 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் ஃபாலோ ஆன் ஆகி உள்ளது.

ஆஃப்கானிஸ்தான் தனது முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை நேற்று பெங்களூருவில் விளையாட தொடங்கி உள்ளது.   டாஸ் வென்ற  இந்தியா நேற்று தனது பேட்டிங்கை தொடங்கி இன்று முதல் இன்னிங்சில் 474 ரன்கள் எடுத்து முடித்தது.   அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்தது.

இந்திய வீரர்களின் வேகப்பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் மிகவும் திணறிப் போனார்கள்.    ஆப்கானிஸ்தான் அணி 25 ரன்களிலேயே நான்கு விக்கெட்டுகளை இழந்தது,   அதற்குப் பின் வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.   இதனால் இந்த அணி ஃபாலோ ஆன் ஆகி உள்ளது.  அதை ஒட்டி ஆப்கானிஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்ஸ் விளையாட உள்ளது.

You may have missed