ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் சகா இடம்பெறுவது சந்தேகம்….பரிசீலனையில் 3 வீரர்கள்

மும்பை:

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடும் டெஸ்ட் போட்டி வரும் 14ம் ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது.

இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் சகா இடம்பிடித்திருந்தார். ஐபிஎல் போட்டியில் சகாவுக்க வலது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து சகா கூறுகையில் ‘‘பிசிசிஐ என்னுடைய காயம் குறித்து ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து வருகிறது. இறுதி முடிவு அவர்கள் கையில் தான் உள்ளது. ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கு தயாராகுவேனா என்பது தெரியவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

சகாவின் காயம் குறித்து அறிய எக்ஸ்-ரே அறிக்கைக்காக பிசிசிஐ காத்திருக்கிறது. அறுவை சிகிச்சை தேவையா? இல்லையா? என்பது இதன் பின்னர் தான் தெரியவரும். எனினும் சகாவுக்கு பதிலான ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பிரதீன் படேல், தினேஷ் கார்த்திக், ரிஷாப் பந்த் ஆகியோரில் ஒருவர் இடம்பெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.