இந்தியா – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட் :  முதல் இன்னிங்சில் இந்தியா 474 ரன்கள்

பெங்களூரு

ந்தியா- ஆப்கானிஸ்தான் இடையே நடக்கும் டெஸ்ட் தொடரில் முதல் இன்னிங்சில் இந்தியா 474 ரன்கள் எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்து வழங்கப்பட்டது.   தனது முதல் டெஸ்ட்  பந்தயத்தை ஆப்கானிஸ்தான் இந்தியாவுடன் விளையாடி வருகிறது.  பெங்களூர் சின்னசாமி விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கிய போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழந்து 347 ரன்கள் எடுத்திருந்தது.   இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் அஸ்வின் 18 ரன்களிலும் ஜடேஜ 20 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதன் பிறகு ஹர்திக் பாண்டியா 71 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அனைத்து விக்கட்டுகளையும் இந்தியா இழந்த போது 474 ரன்கள் எடுத்திருந்தது.

தற்போது முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் களம் இறங்கி உள்ளது.