இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற உள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியின் பரப்பரப்பு ஆட்டத்தில் 3 விக்கெட் வித்யாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்றது.

2nd

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அதன்படி நேற்று முன் தினம் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 3 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்றது.

இதனை தொடர்ந்து இரு அணிகளும் மோதும் 2வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி இந்த போட்டியில் வெற்றிப்பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதில் இந்திய அணி வெற்றிப்பெற்றால் 2 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்யும்.

இதன் காரணமாக இன்றைய போட்டியில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோன்று ஆஸ்திரேலியா அணி தனது சொந்த மண்ணில் அடைந்த தோல்விக்கு இந்த தொடரின் மூலம் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் முனைப்போடு விளையாடி வருகிறது. இதனால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.