2வது டெஸ்ட் போட்டி: நிதானமாக விளையாடிய ஆஸ்திரேலியா முதல் நாளில் 277 ரன்கள் சேர்ப்பு

இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 6விக்கெட் இழந்து 277 ரன்களை சேர்த்துள்ளது.

india

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டின் இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

முதலில் களமிறங்கிய ஹாரிஸ் மற்றும் ஆரோன் பின்ச் அரைசதம் கடந்தனர். இந்நிலையில் விக்கெட் கைப்பற்ற முடியாமல் இந்திய அணி திணறிய போது ஹாரிஸ் 70 ரன்களிலும், பின்ச் 50 ரன்களிலும் வெளியேறினர். அவர்களை தொடர்ந்து வந்த ஷான் மார்ஸ் 45 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 58 ரன்களிலும் வெளியேறினர்.

இதையடுத்து முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களை குவித்துள்ளது. அந்த அணியின் டிம் 16 ரன்களுடனும், கம்மின்ஸ் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சாா்பில் இஷாந்த் ஷா்மா, ஹனுமன் விஹாரி தலா 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், பும்ரா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினா்.