Random image

3வது டெஸ்ட் போட்டி: வெற்றியின் விளிம்பில் இந்தியா…!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 399 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை எடுத்துள்ளது.

india

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரீல் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் 7விக்கெட் இழப்பிற்கு 443 ரன்களை இந்திய அணி எடுத்து அசத்தியது. இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேய அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனை தொடர்ந்து 66.5 ஓவர்களில் 151 ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய அணி பாலோ ஆன் ஆனது. இந்த போட்டியில் பந்து வீச்சாளர் பும்ரா 33 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

292 ரன்கள் முன்னிலை வகித்த போதும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ ஆன் வழங்க வில்லை. இதையடுத்து இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இதில் விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட வீரர்கள் சொதப்ப இந்திய அணி 37.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களை எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதனை தொடர்ந்து 399 இமாலய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. இதில் ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரரகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அணி தோல்வியை நோக்கி சென்றது.

இந்நிலையில், கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் பொறுப்புடன் ஆடிய கம்மின்ஸ் அரை சதம் கடந்தார். அவர் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. கம்மின்ஸ் 61 ரன்களுடனும், லயன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளார்.

8 விக்கெட் இழந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இன்னும் 141 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால் இந்திய அணி உள்ளது. நாளை நடைபெறும் இறுதி நாள் ஆட்டத்தில் இந்தியா 2விக்கெட்டுகளையும் கைப்பற்றி கணிசமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.