சர்வதேச ஒருநாள் போட்டி: 10ஆயிரம் ரன்களை கடந்து தோனி மேலும் ஒரு சாதனை

சிட்னி:

ஸ்திரேலியாவில் நடைபெற்றும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வரும் இந்தியஅணியின் முன்னாள் கேப்டனான, மகேந்திர சிங் தோனி, சர்வதேச ஒருநாள் விளையாட்டில் 10ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

இதன் காரணமாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5வது நபர் என்ற பெருமைய பெற்றுள்ளார்.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அங்கு பல்வேறு போட்டிகளில் ஆடி வரும் இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறது.

இன்றைய முதல் ஒருநாள் போட்டியில் தோனி, ரோகித் சர்மா இணை ஆடி வருகின்றனர். இந்த நிலையில், தோனி சர்வதேச போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூ மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருதினப் போட்டியின்போது, ஒருதினப் போட்டிகளில், 10 ஆயிரம் ரன்கள் கடந்த 4வது இந்தியராகவும், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்களில் 12வது வீரர் என்ற பெருமையை  தோனி பெற்றிருந்த நிலையில், தற்போது சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் 10 ஆயிரம் ரன்களை கடந்து தோனி சாதனை படைத்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 000-run mark in ODI cricket, 10, 10ஆயிரம் ரன், Dhoni became the fifth cricketer, Mahendra Singh Dhoni, சர்வதேச ஒருநாள் போட்டி, தோனி சாதனை
-=-