இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் மூன்றுவகை கிரிக்கெட் தொடர், இதுவரை சமபலத்தில் சென்று கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா வென்றது. முதல் 2 போட்டிகளை ஆஸ்திரேலியா வெல்ல, மூன்றாவது போட்டியை வென்றது இந்தியா.

டி-20 தொடரை இந்தியா வென்றது. முதல் 2 போட்டிகளை இந்திய அணி வெல்ல, மூன்றாவது போட்டியை ஆஸ்திரேலியா வென்றது.

ஆக, இரண்டு தொடர்களும் சமபலத்தில் முடிந்தன.

இந்நிலையில், மிக முக்கியமான டெஸ்ட் தொடர் தொடங்கியது. இதில், முதல் டெஸ்ட் போட்டியை, ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெல்ல, பதிலுக்கு, இரண்டாவது டெஸ்ட் போட்டியை, அதே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்தியா!

ஆக, இதுவரையான நிலவரப்படி, இரு அணிகளின் பலமும் சமநிலையில் உள்ளது. ஒருவேளை இந்த டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தால், ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி மேற்கொண்ட சுற்றுப்பயணம் ஆச்சர்யகரமான ஒன்றாக அமையும்!