முதல் டி20 போட்டி: 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியா அணியுடன் நடைபெறும் டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையில் 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ind

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி30, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் முதல் டி20 போட்டி நாளை பிற்பகலில் பிரிஸ்பர்ன் நகரில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் முதல் டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 12 பேர் கொண்ட இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், குர்னால் பாண்டியா, குல்தீப் யாதவ், கலீல் அகமது, புவனேஷ்வர் குமார், பும்ரா மற்றும் சாகல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலியா சிறப்பான செயல்படாவிட்டாலும், தனது சொந்த மண்ணில் இந்தியாவை எதிர்கொள்வதால் இந்த போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.