தொடங்கியது 3வது டெஸ்ட் – டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்!

அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் பகலிரவு டெஸ்ட், அகமதாபாத்தின் சர்தார் படேல் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இது பிங்க் பந்தில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டியாகும்.

இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் மைதானத்தில், 50% அளவிற்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு போட்டி தொடங்கியுள்ளது.