அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே, 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு, அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதே மைதானத்தில், கடந்தமுறை நடைபெற்ற போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக இருந்தது.

கடந்தப் போட்டியில், ஆடுகளம் குறித்த பல விமர்சனங்கள் இருந்த நிலையில், நாளை எப்படியிருக்கும் என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

அதேசமயம், இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ள நிலையில், அவருக்கு பதில் முகமது சிராஜ் அல்லது உமேஷ் யாதவ் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. மேலும், நாளை ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து, இந்திய அணி 3 வேகங்களுடன் களமிறங்க நினைத்தால், இஷாந்த் ஷர்மா, முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் மூவரும் இடம்பெறலாம். அஸ்வின் & அக்ஸார் சுழற்பந்து வீச்சாளர்களாக களமிறங்குவர். அதேசமயம், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பில்லாமல் போகலாம்.

நாளை தொடங்கும் போட்டியை இந்திய அணி ‘டிரா’ செய்தால்கூட, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.