கடைசி டெஸ்ட் போட்டிகளில் பிரித்வி ஷா, விஹாரிக்கு வாய்ப்பு…முரளி விஜய், குல்தீப் யாதவ் நீக்கம்…

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் விஹாரிக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் 2 டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றிப்பெற்ற நிலையில் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி வென்றது.

test-match-1

இங்கிலாந்திற்கு சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டிகல் நாட்டிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி ஏமாற்றம் அளித்த இந்திய அணி அடுத்து நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றிப்பெறும் இலக்கோடு விளையாடியது.

இந்திய வீரர்களின் அபார ஆட்டத்தால் மூன்றாவதை டெஸ்ட் போட்டியை 203 ரன்கள் வித்யாசத்தில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில் கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் சில மாற்றங்களை பிசிசிஐ செய்துள்ளது. நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் குறிப்பிடும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத முரளி விஜய், குல்தீப் ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் விஹாரிக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது இந்திய அணியில் கோலி (கேப்டன்), தவான், ராகுல், பிரித்வி ஷா, புஜாரா, ரகானே, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அஷ்வின், ஜடேஜா, பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ், ஷார்துல் தாகூர், கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ஹனுமா விஹாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.