Random image

ஆசிய கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்….

துபாய்:

சிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இன்று  இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு பிறகு போட்டி நடைபெற உள்ளது.  இந்த போட்டி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ்வென்ற பாகிஸ்தான் அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கி உள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில்  குரூப் ஏ மற்றும் பி., பிரிவுகளில் லீக் சுற்றில் பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும்  இலங்கை மற்றும் புதிதாக இணைந்த  ஹாங் காங் அணிகள்  தோல்வியுற்று ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

நேற்று ஹாங்காங் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டிக்கான டாஸ் மாலை 4.30 மணி அளவில் சுண்டப் பட்டது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா காயனை சுண்ட, பாகிஸ்தானி அணி கேப்டன்  சர்பிராஸ் அகமது டெய்ல் என அழைத்தார்.

சர்பிராஸ் அழைத்தபடி டெய்ல் விழ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் ஷர்துல் தாகூர், கலீல் அகமது நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா, பும்ரா சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்றைய போட்டி இந்திய மற்றும் பாகிஸ்தான்  ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்தியா பாக்கிஸ்தான் அணிகள் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.