Random image

இந்தியாவிற்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பாக்கிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 43.1 ஓவர்கள் முடிவில் 162 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்க உள்ளது.

pakistan

ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைப்பெற்று வருகின்றன. இன்று நடைபெறும் போட்டியில், குரூப் ‘ஏ’ பிரிவை சேர்ந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதி விளையாடி வருகின்றன. பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இந்த போட்டிக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணி எர்த்து விளையாடி வருகிறது.

ஆட்டம் தொடங்கிய முதல் 5 ஓவர்களில் புவனேஷ்குமார் பந்து வீச்சீல் இமாம் – உல் – ஹக் மற்றும் பக்கர் சமான் ஆட்டமிழந்தனர். இதையடுத்து பத்து ஓவர்கள் முடிவில் 25 ரன்களில் 2 விக்கெட்டுக்களை பாக்கிஸ்தான் இழந்தது. இதையடுத்து, 21.2 ஓவர்கள் முடிவில் பாக்கிஸ்தான் மூன்றாவது விக்கெட்டை இழந்தது.

அடுத்தடுத்து ஒரு சில ரன்களில் பாக்கிஸ்தான் வீரர்கள் விக்கெட்டுக்களை இழக்க 43.1 ஓவர்களில் 162 ரன்களை பாக்கிஸ்தான் எடுத்தது. புவனேஷ்குமார் மற்றும் ஜாதவ் தலா 3 விக்கெட்டுக்களையும், பும்ரா 2 விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.

பாக்கிஸ்தான் வீரர் பாபர் அசாம் 62 பந்துக்களுக்கு 47 ரன்களையும், சோயிப் மாலிக் 67 பந்துக்களுக்கு 43 ரன்களையும் எடுத்தனர்.