Random image

ஆசியக் கோப்பை: பாக்கிஸ்தானை பழித்தீர்க்குமா இந்தியா …விறுவிறுப்பான போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி தனது எதிரியான பாக்கிஸ்தானை எதிர்கொள்கிறது. ஓராண்டுக்கு பிறகு இன்றைய போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தப்பட உள்ளன.

ind

14வது ஆசியக் கிரிக்கெட் தொடர் துபாய் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

குரூப் ஏ மற்றும் பி., பிரிவுகளில் லீக் சுற்றில் பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த இலங்கை, ஹாங் காங் அணிகள் ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. நேற்று ஹாங்காங் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டியில் ஓராண்டுக்கு பிறகு இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோத உள்ளன. பவுலிங்கில் பலம் மிக்க பாக்கிஸ்தான் அணியை இந்தியா எப்படி வீழ்த்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், இறுதியாக சாம்பியன் டிராபி போட்டியில் பாக்கிஸ்தானுடன் மோதி தோல்வியடைந்ததற்கு இந்தியா பழித்தீர்க்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டிக்கான டிக்கெட்டின் குறைந்த விலை ரூ.9 ஆயிரம் எனவும் அதிகபட்ச விலை ரூ.1.15 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் மொத்தம் உள்ள 25 ஆயிரம் டிக்கெட்களும் விற்று தீர்ந்துள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய போட்டியை காண பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருகை தருவார் எனக் கூறப்படுகிறது.